Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Saturday, September 24, 2005

சுனாமி...காத்ரீனா...


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

சுனாமி.. காத்ரீனா.. ரீட்டா..

பெயர் மட்டும் மாற்றிவரும்
பொய்முகமே! பேயகமே!

பூபாளவேளையில் உன்
வீட்டு வாசலில்
உடற்க்கோளம் போடுகிறாய் ஏனோ!
எங்கள் உயிர் உனக்கென்ன தேனோ!

கடல்தாயே நீ பெற்றெடுத்தாயா?
தத்தெடுத்தாயா இப் பிசாசுக்குட்டிகளை?

உயிர்களின் பிறப்பிடமே..
உயிர்ப்பழி கொள்ளுவதோ!

ஏ கடல் தாயே !
காலம் மறந்து கவலைகள் துறந்து
காத்திருப்போம் உன்காலடியில்
கால்வருடிச்செல்லும் நீ எம்
கால்வாரி விடலாமா!

தினம்தினம் உன் மடியில்
உறங்கும் குழந்தைகளை
உன் நீர் நாக்கால் உப்புப்பால் வார்க்க
எப்படி முடிந்ததோ!

பவழம் முத்தில் குளிக்கும் மாதா!
எம்மவர் உடல்களால் மாலை
கோர்த்ததன் மர்மம் என்ன?

கன்னி, காதலி, காவியதேவதை என
கவிகள் பாடிய தேவியே!
கல்லறைக்காளியாய்
மாறிப்போனாயே!

பஞ்சபூதங்களே உமை
பூந்தென்றலாய்,கோயில் தீபமாய்,
பூக்காடாய்,உயிர் நீராய் பூஜித்த எமக்க
ஓங்காரப்புயலாய்,எரிமலைக்குழம்பாய்,
பூகம்பக்காடாய்,சுனாமிப்பேயாய்
தரித்தபோது
திக்கற்ற பிரபஞ்ச
ரகசியம்உணர்ந்தோம்..

இயற்கையே!
உன் நிலை உணராது போலியாய்ப் போனோம்.
உன் சத்தி மறந்து சகலமும் செய்தோம்.
எம்மவர் கர்வம் கரைத்திடவே
எல்லாம் நான் என நாட்டியம்
ஆடிநையோ!




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 22, 2005

9 நட்புடன்


ஜன்னல் தாண்டி
தென்னங்கீற்று தாண்டி
மென் பனிப்போர்வை மேகம் தாண்டி
குட்டிக்குட்டித்தாரகை நடுவே
எட்டிப்பார்க்கும் நட்புநிலா..

ஓட்டப்பந்தயத்தில்
நம் கால்கள் இடம் மாறி
உதைத்துக்கொள்ள
நாம் நண்பர்கள்..

நட்பின்
எண்னற்ற தருணங்களை
இழந்துவிட்டோம்

நாம் பெண் ஆண் என்பதால்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, September 20, 2005

கடவுள்&காதல்

கடவுள்&காதல்

இதயம் மூளையை கருவறையாக்கி
கனவும் நினைவும் கலந்து பிறப்பது.
விஞ்ஞானமும் மெய்ஞானமும்தேடித்துருவி
விளங்காமல் விளக்குவது
முடிவற்று அழிவற்று
இனம் மொழி தேசமற்று
சோதனையும் வேதனையும்
வாடிக்கையாக்குவது.
ஒன்றுபட்டால் மதிமயக்கம்
தனித்திருந்தால் மனமயக்கம்.
இவை போல்
கொடுப்பதுமில்லை...
கெடுப்பதுமில்லை
...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, September 18, 2005

சின்னச்சின்ன...


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????புதிய பேங்க் லாக்கர் கிடைத்தபிறகு
பழைய லாக்கர் காலியாகவே...!
யாரும் வராத எனது தமிழ்மணம்
PLOGபோலவே!
ஏன் அதை திரும்பத்தராமல்
வைத்திருக்கிறேன்!
என்றாவது யாராவது வருவார்கள்
தேவைப்படுத்துவார்கள் என்பதாலா!


என் விழிக்கும் தினமும் வானவில்!
ஓ! தூரத்தில் சூரியன் நீ!!!



உனது காய்ச்சலில் கொஞ்சம்
பங்கு கொடு!
உனது வலிகள் எனக்குள்ளும்
வர விடு!
உன் சோகங்களை எனக்குள்
புதையதுவிடு!
நம் காலங்கள் ஒன்றாய்
இணையவிடு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 15, 2005

7.சித்தர் பாடல் 1

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? சித்தர் பாடல்கள்
பண்டைக்கால சிறுமியர் காதில் அணியும் குதம்பை என்ற அணிகலனாய் தன்னை பாவித்து பாடுவதாக அமைந்துள்ளது.
சமையங்கள் கடந்து பகுத்தறிவோடு ஆன்மீகத்தை மக்களுக்கு
வழங்கிய சித்தர்கள் பாடலை வலைஞ்ஞர்களுக்கு தருவதில்
மகிழ்ச்சி அடைகிறேன். இப்பாடலை நன்கு கவனித்தால் பக்தியின் போலித்தனங்களை சித்தர் நையாண்டியுடன் தோலுரித்தல் விளங்கும்.
குதம்பைச் சித்தர் பாடல்

வெட்டவெளி தன்னை மெய்யென் றிருப்பார்க்குப்
பட்டயம் (தாமிர சாசனம்) ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி?
மெய்ப்பொருள் கண்டு விளங்குமெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய் கற்பங்கள் ஏதுக்கடி?
காணாமல் கண்டு கருத்தோ டிருப்பார்க்கு
வீணாசை ஏதுக்கடி குதம்பாய் வீணாசை ஏதுக்கடி?
வஞ்சக மற்று வழிதனைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி?
ஆதார மான அடிமுடி கண்டோர்க்குப்
வாதாட்டம்[வாக்குவதம்] ஏதுக்கடி குதம்பாய் வாதாட்டம் ஏதுக்கடி?
நித்திரை கெட்டு நினைவோ டிருப்பார்க்கு
முத்திரை ஏதுக்கடி குதம்பாய் முத்திரை ஏதுக்கடி?
தந்திர மான கலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய் மந்திரம் ஏதுக்கடி?
சத்திய மான தவத்தில் இருப்போருக்கு
உத்தியம்[யாகவகை]ஏதிக்கடி குதம்பாய் உத்தியம் ஏதிக்கடி?
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய் வாட்டங்கள் ஏதுக்கடி?
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி? உச்சிக்கு மேற்சென் றுயர்வெளி கண்டோருக்கு
இச்சிப்பிங்[விருப்பம்] கேதுக்கடி குதம்பாய் இச்சிப்பிங் கேதுக்கடி?
வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகந்தான் ஏதுக்கடி குதம்பாய் மோகந்தான் ஏதுக்கடி?
சாகாமல் தாண்டித் தனிவழி போவார்க்கே
ஏகாந்தம்[தனிமை] ஏதுக்கடி குதம்பாய் ஏகாந்தம் ஏதுக்கடி?
அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்
தந்திரம்[நூல்] ஏதுக்கடி குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி ?
ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி குதம்பாய் ஞானந்தான் ஏதுக்கடி?
சித்திரக் கூத்தைக் தினந்தினங் காண்போர்க்கு
பத்திரம்[இலை] ஏதுக்கடி குதம்பாய் பத்திரம் ஏதுக்கடி?
முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம்[அருங்கோணம்] ஏதுக்கடி சட்கோணம் ஏதுக்கடி?
அட்டதிக் கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டனை[நடிப்பு] ஏதுக்கடி குதம்பாய் நட்டனை ஏதுக்கடி?
முத்திபெற் றுள்ள முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம்[பாட்டு] ஏதுக்கடி குதம்பாய் பத்தியம் ஏதுக்கடி?
அல்லலை நீக்கி அறிவோ டிருப்பார்க்குப்
பல்லாக் கேதுக்கடி குதம்பாய் பல்லாக் கேதுக்கடி?
அட்டாங்க யோக மாறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடி?
வேக மடக்கி விளங்குமெய் ஞானிக்கே
யோகந்தான் ஏதுக்கடி குதம்பாய் யோகந்தான் ஏதுக்கடி?
மாத்தானை வென்று மலைமே லிருப்பார்க்குப்
பூத்தானம்[புதுமை] ஏதுக்கடி குதம்பாய் பூத்தானம் ஏதுக்கடி?
செத்தாரைப் போகே திரியுமெய்ஞ் ஞானிக்குக்
கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி?
கண்டாரை[மாந்தரை] நோக்கிக் கருத்தோ டிருப்பார்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய் கொண்டாட்டம் ஏதுக்கடி?
காலனை வென்று கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள்[அலங்காரம்]ஏதுக்கடி குதம்பாய் கோலங்கள் ஏதுக்கடி?
வெண்காய முண்டு மிளகுண்டு சுக்குண்டோர்க்
குண்காயம்[உடல்] ஏதுக்கடி குதம்பாய் உண்காயம் ஏதுக்கடி?
மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்பார்க்குத்
தேங்காய்ப்பா லேதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி?
பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்க்கு
முட்டாக் கேதுக்கடி குதம்பாய் முட்டாக் கேதுக்கடி?
தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி?
தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி?
பத்தாவுந் தானும் பதியோ டிருப்பாருக்கு
உத்தாரம்[மறுமொழி] ஏதுக்கடி குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி?
.... .... ... ....

கண்டாரை நோக்கி...[.கண்+தாரை+]பிறர் துயறம் துடைப்பதே
கொண்டாட்டம் எனவும் கொள்ளளாம்
மாங்காய் பால்...
உச்சியில் உள்ள ஆறாம்நிலை எட்டி குண்டலினி[பிட்யூட்ரி]தூண்டப்படுவதால் ஏற்ப்படும் ஞான நிலை பெற்றவனுக்கு சாதாரண தேங்காய்ப்பால் தேவையா?
பட்டணம் சுற்றி ... [பட்டு+அணம்]கோவணம் ]எளிமையான உடைதறிக்க வேண்டியவனே [ஞானி] முட்டாக்கு போட்டுக்கொண்டு மூடு மறைவான வாழ்க்கை எதற்காக ?
தாவாரம்...
படிக்காமல் ஊர்சுற்றிவிட்டு பாஸ் வேண்டும் மாணவனாய்
பக்திப்பாட்டு பாடுவதால் மட்டும் சுக வாழ்க்கை கிட்டுமா?

தாவாரம்-தா-துன்பம் வாரம்-பங்கு வீடு-விடுதலை
தேவாரம் பாடுவதால் மட்டும் இத்துன்பவாழ்விலிருந்து நீ விடுதலைபெற முடியாது,பிறர் படும் துன்பத்தில் உன் பங்கே
நீ இறைவனுக்கு செய்யும் வழிபாடு.
பத்தாவும் தானும்...தலைவனும் தலைவியுமாய் இல்லறம்
காணுவதே சிறந்த பத்தி.பெண் தான் இல்லம்.எல்லா ஆசை அறங்களின்
முடிவும் இல்லறமே. மக்களிடம் செய்யும் அன்பே உண்மையான பத்தி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 08, 2005

வைரமுத்துவுக்காக

வைரமுத்து.....1

படைத்தோனே... படைத்தோனே...
ஏன் படைத்தாய் இத்துனைய் மெல்லியதாய்
பாவையர் இடை
கையூட்டுப்பெற்றனையோ!
தசைக்கோர் குறைவுமுண்டோ?

கையூட்டும் பெறவில்லை
சதைக்கோர் குறைவுமில்லை
இடையின் தசை எடுத்து
ஈடு செய்தேன் சற்றுயரே...!

இந்த வங்கதேச நாட்டுப்பாடலை
எங்கோ கேட்ட ஞாபக வருகிறதா?
ஜீன்ஸ் திரைப்படத்தின் வைரமுத்துஅவர்களின்
வரிகள் இதோ
அன்பே அன்பே ... ... .....
....பெண்ணே உந்தன் மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப்போனேன்
ஆஹா அவனே வள்ளலடி........

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, September 05, 2005

காவல் தெய்வம்

தினத்தந்தி 2.9.05

கற்பழிப்பதை தடுக்கும் கருவி
ஜோகன்ஸ்பர்க்,செப்-2
கற்பழிப்பதை தடுப்பதற்காக நவீன கருவி ஒன்றை தெனாப்பிக்காவைச்சேர்ந்த சானட் எத்லர்ஸ் என்பவர் கண்டுபிடித்து இருக்கிறார்.
மாதவிலக்கு காலத்தில் பெண்கள் அணியும் பஞ்சு போல இதை அணிந்து கொள்ளாம்.இந்த கருவி பெண்கள் கற்பழிக்கப்படாமல் பாதுகாக்கிறது.கற்பழிக்கமுயற்சி செய்பவர்களின் உறுப்பை கொக்கி இழுப்பது போல இழுத்துவிடும். பிறகு ஆஸ்பத்திரிக்கு சென்றுதான் அதை அகற்ற முடியும். தெனாப்பிக்காவில் ஆண்டு தோறும் 50ஆயிரம் பேர் கற்பழிக்கப்படுவதாக போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ரேபக்ஸ் என்ற இந்தக்கருவியை கண்டு பிடித்திருக்கும் சானட் ஒரு பெண் அவர் கூறுகிறார்-பெண்கள் கற்பழிக்கப்படுவதை தடுக்க இதுவரை எதுவும் செய்யப்படவில்லை,அதை தடுக்க இது தான் சரியான நேரம்.

சானட் வாழ்க..... பெண்மையை நேசிக்கத்தெரியாத வக்கிர கொடூரர்களுக்கு கத்தரி வருகிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 01, 2005

முதல் கவிதை

82 ஜீன் `கணையாழில்`
வெளிவந்த எனது
பூபாளம்.......

நல்ல மேய்ப்பன் [good shepherd]

நீ ஆடாக இருக்கும் வரை
அவன் மனிதன் தான்
நீயும் மனிதனாகிவிடு
அவன் மனிதனா மிருகமா
தெரிந்துவிடும் .......

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

என்னைப்பற்றி

ஈரோடு மாவட்டத்தில் பெருங்கதை
அரங்கேறிய விஜயமங்களம்
என்ற ஊரிலிருந்து 5 கல் தொலைவு எனது சிற்றூர்.
கல்லுரிக்கதைகள்- தாமிரபரணிக்கரைகள்
சொல்லித்தந்த சித்தமருத்துவம்.
கொஞ்சம் கவிபாடச்சொன்னது
`செம்மலரும்’` கணையாழி’யும்.
உம்மிடம் பேசவந்தது நட்பின்
இலக்கணம் வேண்டி, தமிழ்மண
சுவாசம் நாடி .........

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.