மூலிகைச்செல்வங்கள்-4

[BLACK PEPPER]
“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
உணவுப்பொருளாகவும் மருத்துவபொருளாகவும் பண்டுதொட்டு பயண்படுத்தப்பட்டுவரும் மிளகானது சிறுகொடிவகையைச்சார்ந்தது. மலைப்பகுதியில் 1200 மீட்டர் உயரத்திற்கு மேல் பயிர்செய்யப்படுகிறது.
இந்தியாவைத்தாயகமாக்கொண்டு சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன்பிருந்தே நம்மவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
நம் நாட்டில் மிளாகாய் அறியப்படும் முன்னர் மிளகு மட்டுமே உணவில்
பயன்படுத்தப்பட்டுவந்தது.
காரம் கைப்பு சுவையும்,வெப்பத்தன்மையும் கொண்டது.
சளி இருமல் வயிற்றுவாயு செறியாமை சுரம் இவைகளை குணமாக்குவது
மிளகின் பொதுவான குணமாகும்.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும்
சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.
வேண்டிய அளவு மிளகுத்தூளை புளித்தமோரில் ஊரவைத்து காயவைத்து
இளவருப்பாக வருத்து பொடிசெய்து வைத்துக்கொள்ளவும் .இதை 500 மி.கி
எடுத்து வெள்ளம் சேர்த்து உண்டுவர தலைவலி மூக்கடைப்பு தீரும்.
மிளகு+மஞ்சள்+பூண்டு ஒருபல் இவைகளை இடித்து பாலில் வேகவிட்டு
வடித்தபாலைக்குடிக்க இருமல் தொண்டைக்கம்மல் குணமாகும்.
மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து
வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால்,உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர
முடிமுளைக்கும்.
மிளகில் உள்ள வேதியட்பொருக்கள் கீழே
Piperine 5-9%
Piperidine 5%
Balsamic volatile essential oil 1-2%
Fat 7%
Starch,lignin,gum, 1%
Proteids 7%
Ash containing organic matter 5%
நீண்ட நாளாச்சு உங்களையெல்லாம் பாத்து
மன்னிக்கனும் மன்னர்களே![இரு பால் மன்னர்களும்]
2 Comments:
அதெப்படி எங்களையும் மன்னர்கள்னு சொல்லலாம்? ஏற்கனவே கொம்பு முளைத்தால் எப்படியிருக்கும்னு வீ.எம். படம் போட்டிருக்கார், அப்புறம் மீசை வைச்சா எப்படியிருக்கும்னு யாராவது படம் காட்டிடப் போறாங்க!!
sithan:
If you heat a little ghee and fry aabout 5 r 6 pepper and eat the whole thing, it is a cure for dry cough.
I was going to send my link on curcumin longo (blog on curcumin effect on gene expression) and forgot bout it.
Thanks fo rwritin gon these
Post a Comment
<< Home