மூலிகைச்செல்வங்கள் 1
மூலிகைச்செல்வங்கள்
நம் அனைவராலும் அறியப்பட்டதும் அன்றாடம் நாம்
பயன்படுத்தப்படுவதுமான மூலிகை மற்றும் உணவுப்பொருக்கள்
பற்றி எழுதலாம் என் எண்ணி முதலில் அருகம்புல்லிருந்து
ஆரம்பிக்கிறேன்
1.அருகம்புல் [Cynodon doctylon]
முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும்
உடையது.உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும்,இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும்,
கண் பார்வை தெளிவுபெறும்.அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு
கரோட்டினாய்டுகள் உள்ளன.
இதைப்பற்றி மேலும்
“அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை” [அகத்தியர்]
அருகம்புல் சாற்றை தினமும் காலை குடித்துவர தோல் நோய்கள்,
இரத்தமூலம்,வயிற்றுப்புன்,சிறுநீர் எரிச்சல்,பெண்களுக்கு இரத்தக்குறைவால் ஏற்ப்படும் வெள்ளை,மருந்துகளினால் ஏற்ப்படும்
ஒவ்வாமை ஆகியன தீரும்.இதன் சாற்றை தனித்தும் பால்கலந்தும் குடித்துவரலாம்.
11 Comments:
சரி இதெல்லாம் இருக்கட்டம். சில காரணங்களை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது.
1)எதற்காக பிள்ளையார் பிடித்து அதாவது சாணத்தில் பிள்ளையார் பிடித்து பிறகு அதில் அறுகம் புல் குத்துவார்கள். ?
2)திருமண வைபவங்களில் மணமகனை மணமகளை குளிக்க வார்பதற்கு முதல் ஒரு குhடத்தில் இருத்தி ஒரு தாம்பாளத்தில் பால் அறுகம் புல் மஞ்சள் கலந்து தலையில் வைத்து முழுக வார்பார்கள் அதேன்.?
ஏதும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்பது புரிகிறது. அதை தெரியாமலே சடங்கு என செய்து வருவது தான் மனசுக்கு கடினமாக உள்ளது. அது பற்றி ஏதம் தெரிந்திருந்தால் குhறுங்களன்.
பதிவும் பின்னூட்டமும்..
பதிவு ஒரு மருத்துவ பயனைச் சொல்லுகிறது.
பின்னூட்டம் பயனற்ற ஒரு சடங்கைப் பற்றி கேள்வி எழுப்புகிறது!
அன்புள்ள சித்தன்,
தங்களின் தளம் பல நல்ல தகவல்களைக் கொண்டுள்ளது. இவற்றினை பலருக்கும் அறியத் தர எனக்கு ஆவல். எனவே எங்கள் மன்றத்தில் பயன்படுத்த உங்கள் அனுமதி தேவை.
அன்புடன்,
மூர்த்தி
www.muthamilmantram.com
சித்தரே, இன்னும் பல மருத்துவ டிப்ஸ் கொடுங்கள்.
-நித்தில்
தங்கமணிக்கு கேள்வி கேட்பது பிடிக்காதோ?
படித்ததை பயனுள்ளதாக்க மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல முன்னேற்றம்.
நன்றி மூர்த்தி அவர்களே
தாராளமாக உங்கள் மன்றத்தில்
பயன்படுத்துங்கள்.உங்கள் மன்றம் நானும் வருகிறேன்!
நளாயினி அவர்களுக்காக
எந்தக்காரியத்திற்கும் ஒரு கடவுள் முன்னிருத்தி
செய்தல் வசதியான வழக்கமாகி இருக்கலாம் அது மஞ்சள் அல்லது சாணத்தில் அமைந்தது.
அருகம்புள் எளிதில் எந்த இடத்திலும் ஆழமாக பரவலாக வேரூன்றி வளரக்கூடியது .மக்களும்
அதுபோல் அன்பெனும் ஆழத்தில் பாசமெனும் பந்தத்தில் பரவி நீடூழி வாழ வேண்டி அருகைத்
தரிசித்திருக்கலாம்[அருகுபோல் வேறூன்றி ஆல்போல் தழைத்து என்பது மணமக்களை வாழ்த்துதல் வழக்கம்]மஞ்சள் சந்தணம் சாணம்
அருகு எல்லாமே கிருமிநாசினி என்பதையும்
கவனத்தில் கொள்வோம்
மிக்க நன்றி சித்தன் அவர்களே!
Nicely written
nanre.
Post a Comment
<< Home