ஐம்பொறிகளும் ஆடும்மனிதனும்
ஐம்பொறிகளும் அவுட்
இன்னும் பத்துஆண்டுகளில் தமிழ் நாட்டில்
பாதிப்பேருக்கு கண்,காது,மெய்,வாய்,மூக்கு
செயலற்றுப்போகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
பிறக்கும் குழந்தைகூட அம்மாவின் முகத்தைவிட
கம்யூட்டர், டிவியைத்தான் அதிகம் பார்க்கிறது.
நம் தாத்தாவெல்லாம் நிலாவெளிச்சத்தில் படிச்சாங்க வாழ்ந்தாங்க, நம் வாரிசுகளோ குழல்விளக்கு இல்லாமல் தூங்கக்கூடப்போவதில்லை.
கண்ணாடி போடாத மக்களின்
எண்ணிக்கை குறைஞ்சுகிட்டேவருது.
வீட்டில் டிவி, பஸ்ஸில் டிவி,காலேஜ்ல டிவி,
டீக்கடை,ஹோட்டல் எங்க போனாலும் எதையாவது பாக்கனும்.
மனுசன யோசிக்கவே விடக்கூடாதுன்னு தான்
இத்தன சேனல்களோ! கண்கள் என்ன பாவம் செய்தன?
நம்ம ஊர் பஸ்ஸில் ஏரும்போது கட்டாயம் கொஞ்சம்
பஞ்சு எடுத்துப்போங்க!இல்லீன்னா உங்களுக்கு தலைவலி
நிச்சயம்,ஏன்னா அத்தனை சத்தமா ஆடியோ,வீடியோ
சாதனங்கள்.
பணம் படைச்சவன் முகமூடிக்காருக்குள்ள
சத்தம் காட்டறான்,பஸ் ஓட்டறவன் பஸ் சத்தத்தையும் மீறி
dts காட்டறான். கடை,பவர்லூம் பட்டறைகள்,
ஹோட்டல், பார்க், கோயில் எங்கெங்கு
கானினும் சப்த்தமடா! செல்போனுடன் அலைவதைப்போல்
நாளை செவிட்டு மிஷினுடன் தான் அலையப்போகிறோம்.
பாலை விட அதிக விலைகொடுத்து தண்ணி வாங்கறோம்
இன்னக்கி குடிக்க வாங்கறதையே நாளைக்கி குளிக்கவும்
வாங்கும் நிலைமை வரலாம்.[இப்போதே வசதிவீட்டு கல்லூரி
கண்மணிகள் சிலர் தலைக்குக்குளிக்க mineral watter ரை பயன்
படுத்துவதாக கேள்வி]
ஆறு ஓடிய பாதையெல்லாம்
சாயக்கழிவுகளும் பாலித்தீன் குப்பைகளுமாய்
ஆயிடுச்சிங்க.
ஆடு மேய்க்கும் சிறுவன் கூட
பாட்டிலில் தண்ணிகொண்டு போறான்னா பாருங்களேன்.
அந்த அளவுக்கு தண்ணிய நாம சுத்தமா வச்சிருக்கோம்.
வெய்யில் கொடுமையா காய்யுது,{ஓசோனை ஓட்டை
போட்டுட்டோம்}சுத்தமான தண்ணி குடிக்கவேகிடையாது.
தலைக்குக்கூட எண்ணை தேய்க்கறதில்ல
தோல் வியாதி வந்தா லேசில போகதுங்க.
பாவங்க நம்ம அழகுத்தோல்.
“பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்” எல்லாம் போச்சுங்க
இப்பொல்லாம் “சாக்கடையின் மத்தியிலே சதிராடும் தென்றல்” தான்.
காற்றில் நச்சுத்தன்மை அளந்துசொல்வதோடு மறந்து போகிறோம்.
ஆஸ்த்மா,அலர்ஜி நோய்கள் நம்மை கொள்ளையடிக்கின்றன.
தூசியில்லாத காத்து வேணுன்னா ஒரு நாள் லீவ் போட்டுட்டு
கிராமத்துப்பக்கம் தான் போகனும்.மூக்குக்கு filter சீக்கிரம் வந்திடும்.
கண்போச்சு,காதுபோச்சு, சுவாசம்போச்சு, தோலின் மென்மைபோச்சு
வாய் மட்டும் இருந்து என்ன செய்யப்போவுது,பேசிப்பேசி சண்டை
வளக்கும்,கண்டதைத்தின்னு சொந்த சுவை மறந்து போகும்.
மெல்ல மெல்ல கொல்லும்[கொள்ளும்]விஷமெனத்தெரிந்தும்
பெப்சி கோக் பான்மசாலா மது புகை என வகைவகையாய்த்
தேடும்.உடலும்கெட்டு உள்ளமும்கெட்டு ஊரைக்கெடுக்கும்.
மொத்தத்தில் மனுசனுக்கு முக்கியமான ஐம்பொறியும்
மனுசனாலேயே கொஞ்சம் கொஞ்சமா செயல்குறஞ்சு
திணறிக்கிட்டிருக்கு...
மேலே உள்ளபடத்துக்கும் மேட்டருக்கும்
சம்பந்தம் ஒன்னும் இல்லீங்க..சும்மாதான்...
7 Comments:
``பொதிகைமலையில் புறப்பட்டு சாக்கடையில் சதிராடும் தென்றல்”- நல்ல உவமை. ஐம்புலனும் போனபின் நாமெல்லாம் ரோபோக்கள் ஆகிவிடவேண்டியதுதான்!
சித்தன்,
டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பதாலும் கண் கெட்டுப் போவதில்லை. கெட்டுப்போகும் என்பது பொதுவாக நம்பப்படும் தவறான கருத்து.
மற்றபடி, noise pollution மற்றும் இன்னபிற செய்யும் தீங்குகள் அதிகம் தான். நல்ல பதிவு.
கண் கெடுகிறதோ மனசும்
நேரமும் நிறையவே பாதிப்பதாக
உணர்கிறேன் நன்றி நாதன் சார்
சார் மோரெல்லாம் தேவையில்லை சித்தன். நான் சின்ன பையன்! 25 வயசுதான் :))
மனசு கெடுகின்றது என்பது personal கேள்வி. எது கெடுதல் என்று நீங்கள் நினைப்பதைப் பொறுத்து!
எத்தனை உண்மை..ம் தொடருங்கள்.
//மேலே உள்ளபடத்துக்கும் மேட்டருக்கும சம்பந்தம் ஒன்னும் இல்லீங்க..சும்மாதான்...//
ஓவ்வொரு பாரா படித்த பிறகும்..மேலே சென்று படத்தை பார்த்து .. என்னவா இருக்கும் .. என்னவா இருக்கும்னு யோசித்தேன் பாருங்க .. என்னய சொல்லனும்.. :)
நல்ல பதிவு சாரே.. சித்தன் வாக்கு சிவன் வாக்கு !
என்னா பண்ணுறது ஆதிமனுசா சொன்னத எல்லா அப்பால தள்ளினாக்க இப்புடித்தா ஆவும்.
ஐம்புலனயும் அவனா அடக்கி கிட்டாக்க உங்கள போல சித்தனாகலாம்.
அடுத்தது வந்து அடக்கிச்சுன்னா இப்புடித்தா அம்போன்னு ஆகனும்.;-)
Post a Comment
<< Home