Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Thursday, September 15, 2005

7.சித்தர் பாடல் 1

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? சித்தர் பாடல்கள்
பண்டைக்கால சிறுமியர் காதில் அணியும் குதம்பை என்ற அணிகலனாய் தன்னை பாவித்து பாடுவதாக அமைந்துள்ளது.
சமையங்கள் கடந்து பகுத்தறிவோடு ஆன்மீகத்தை மக்களுக்கு
வழங்கிய சித்தர்கள் பாடலை வலைஞ்ஞர்களுக்கு தருவதில்
மகிழ்ச்சி அடைகிறேன். இப்பாடலை நன்கு கவனித்தால் பக்தியின் போலித்தனங்களை சித்தர் நையாண்டியுடன் தோலுரித்தல் விளங்கும்.
குதம்பைச் சித்தர் பாடல்

வெட்டவெளி தன்னை மெய்யென் றிருப்பார்க்குப்
பட்டயம் (தாமிர சாசனம்) ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி?
மெய்ப்பொருள் கண்டு விளங்குமெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய் கற்பங்கள் ஏதுக்கடி?
காணாமல் கண்டு கருத்தோ டிருப்பார்க்கு
வீணாசை ஏதுக்கடி குதம்பாய் வீணாசை ஏதுக்கடி?
வஞ்சக மற்று வழிதனைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி?
ஆதார மான அடிமுடி கண்டோர்க்குப்
வாதாட்டம்[வாக்குவதம்] ஏதுக்கடி குதம்பாய் வாதாட்டம் ஏதுக்கடி?
நித்திரை கெட்டு நினைவோ டிருப்பார்க்கு
முத்திரை ஏதுக்கடி குதம்பாய் முத்திரை ஏதுக்கடி?
தந்திர மான கலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய் மந்திரம் ஏதுக்கடி?
சத்திய மான தவத்தில் இருப்போருக்கு
உத்தியம்[யாகவகை]ஏதிக்கடி குதம்பாய் உத்தியம் ஏதிக்கடி?
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய் வாட்டங்கள் ஏதுக்கடி?
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி? உச்சிக்கு மேற்சென் றுயர்வெளி கண்டோருக்கு
இச்சிப்பிங்[விருப்பம்] கேதுக்கடி குதம்பாய் இச்சிப்பிங் கேதுக்கடி?
வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகந்தான் ஏதுக்கடி குதம்பாய் மோகந்தான் ஏதுக்கடி?
சாகாமல் தாண்டித் தனிவழி போவார்க்கே
ஏகாந்தம்[தனிமை] ஏதுக்கடி குதம்பாய் ஏகாந்தம் ஏதுக்கடி?
அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்
தந்திரம்[நூல்] ஏதுக்கடி குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி ?
ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி குதம்பாய் ஞானந்தான் ஏதுக்கடி?
சித்திரக் கூத்தைக் தினந்தினங் காண்போர்க்கு
பத்திரம்[இலை] ஏதுக்கடி குதம்பாய் பத்திரம் ஏதுக்கடி?
முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம்[அருங்கோணம்] ஏதுக்கடி சட்கோணம் ஏதுக்கடி?
அட்டதிக் கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டனை[நடிப்பு] ஏதுக்கடி குதம்பாய் நட்டனை ஏதுக்கடி?
முத்திபெற் றுள்ள முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம்[பாட்டு] ஏதுக்கடி குதம்பாய் பத்தியம் ஏதுக்கடி?
அல்லலை நீக்கி அறிவோ டிருப்பார்க்குப்
பல்லாக் கேதுக்கடி குதம்பாய் பல்லாக் கேதுக்கடி?
அட்டாங்க யோக மாறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடி?
வேக மடக்கி விளங்குமெய் ஞானிக்கே
யோகந்தான் ஏதுக்கடி குதம்பாய் யோகந்தான் ஏதுக்கடி?
மாத்தானை வென்று மலைமே லிருப்பார்க்குப்
பூத்தானம்[புதுமை] ஏதுக்கடி குதம்பாய் பூத்தானம் ஏதுக்கடி?
செத்தாரைப் போகே திரியுமெய்ஞ் ஞானிக்குக்
கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி?
கண்டாரை[மாந்தரை] நோக்கிக் கருத்தோ டிருப்பார்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய் கொண்டாட்டம் ஏதுக்கடி?
காலனை வென்று கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள்[அலங்காரம்]ஏதுக்கடி குதம்பாய் கோலங்கள் ஏதுக்கடி?
வெண்காய முண்டு மிளகுண்டு சுக்குண்டோர்க்
குண்காயம்[உடல்] ஏதுக்கடி குதம்பாய் உண்காயம் ஏதுக்கடி?
மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்பார்க்குத்
தேங்காய்ப்பா லேதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி?
பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்க்கு
முட்டாக் கேதுக்கடி குதம்பாய் முட்டாக் கேதுக்கடி?
தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி?
தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி?
பத்தாவுந் தானும் பதியோ டிருப்பாருக்கு
உத்தாரம்[மறுமொழி] ஏதுக்கடி குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி?
.... .... ... ....

கண்டாரை நோக்கி...[.கண்+தாரை+]பிறர் துயறம் துடைப்பதே
கொண்டாட்டம் எனவும் கொள்ளளாம்
மாங்காய் பால்...
உச்சியில் உள்ள ஆறாம்நிலை எட்டி குண்டலினி[பிட்யூட்ரி]தூண்டப்படுவதால் ஏற்ப்படும் ஞான நிலை பெற்றவனுக்கு சாதாரண தேங்காய்ப்பால் தேவையா?
பட்டணம் சுற்றி ... [பட்டு+அணம்]கோவணம் ]எளிமையான உடைதறிக்க வேண்டியவனே [ஞானி] முட்டாக்கு போட்டுக்கொண்டு மூடு மறைவான வாழ்க்கை எதற்காக ?
தாவாரம்...
படிக்காமல் ஊர்சுற்றிவிட்டு பாஸ் வேண்டும் மாணவனாய்
பக்திப்பாட்டு பாடுவதால் மட்டும் சுக வாழ்க்கை கிட்டுமா?

தாவாரம்-தா-துன்பம் வாரம்-பங்கு வீடு-விடுதலை
தேவாரம் பாடுவதால் மட்டும் இத்துன்பவாழ்விலிருந்து நீ விடுதலைபெற முடியாது,பிறர் படும் துன்பத்தில் உன் பங்கே
நீ இறைவனுக்கு செய்யும் வழிபாடு.
பத்தாவும் தானும்...தலைவனும் தலைவியுமாய் இல்லறம்
காணுவதே சிறந்த பத்தி.பெண் தான் இல்லம்.எல்லா ஆசை அறங்களின்
முடிவும் இல்லறமே. மக்களிடம் செய்யும் அன்பே உண்மையான பத்தி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

At 16 September, 2005, Blogger தாணு said...

எல்லோரையும் படித்து முடித்தவுடன் சித்தர்களாக்கிவிட எண்ணமா?

 
At 16 September, 2005, Blogger erode soms said...

இல்லை இல்லை சித்தராக சாத்தியமே
இல்லை. மதங்கள் ஜாதியின் பெயரால்
நாட்டில் நடக்கும் உண்மையை
சொல்லவே வந்தேன் நன்றி

 
At 16 September, 2005, Blogger rv said...

இந்தப் பாடலில் உள்ள மாங்காய்ப்பால் போன்ற விஷயங்கள் புரியாமற் தான் பதிவிட்டிருந்தேன்.

இப்போது புரிகிறது. விளக்கத்திற்கு நன்றி சித்தன். தொடர்ந்து பதியுங்கள்.

 

Post a Comment

<< Home