இருந்தும் இல்லாமல் இருக்கின்றோம்
மனிதனைத்தேடி
கோடான கோடி ஆண்டுகளாக கொஞ்சம் தலைசாச்சு
ஊர் சுற்றும் இந்த பூமிக்கு வடக்கு கிழக்கெல்லாம்
சொல்லித்தந்தான் மனிதன்.
சூரியன் நிலவு இடி மின்னல்
அதிசயம் கண்டு மிரண்டான் மிரண்டுதெளிந்தவன் அதிசயம்காட்டி
அடுத்தவன் விழியை அகலவைத்தான்!
அதிசயக்காரன் அடுத்தவன்
முதுகைக் குதிரையாக்கி
சவாரிசெய்யத்துவங்கினான்
சவாரி சுகமாய்த்தோனவே
சாட்டைகள் நிறைய வாங்கினான்!
வண்ணவண்ண சாட்டைகள்
வகைவகையாய்-
பூக்கள்கோர்த்தது,
தேனில்தடவியமுட்க்கள் பதித்தது,
பாம்புத்தோலில்பக்குவமாய் செய்தது.
செய்துகொடுத்தவனே
அடியும்வாங்கி
ஆகா! ஆகா! ஆனந்தமென்றான்.
அதிசம்காட்டியவன் அசந்தநேரத்தில்
புதியவன் வண்டியோட்டினான்
இளையவன் கண்களால் மக்களைக்
கட்டிப்போட்டான்.
கட்டுவதில் போட்டிவந்தவுடன்
கட்டுத்தரிகள் இடம்பெயர்ந்தன.
ஆடுகளும் மாடுகளும் கூட்டம் போட்டு
நல்ல மேய்ப்பனை தேடிப்போயின!
மேய்ப்பர்கள் கூட்டத்தில்
ஒப்பந்தமாச்சு
ரகசிய சாசனம் சட்டங்களாச்சு!!!
பிரபஞ்சவெளியில் கடுகளவுபூமி அதில் கால்வாசியே நிலப்பகுதி.அதிலும்
காடு,மலை,ஆறு என போனதில் எஞ்சிய மணல் அளவு மண்ணில்
மனிதன் ஏன் இப்படி???
இதற்க்காகவே மேலும் ஒரு கவிதை [கவிதை தானோ?]
கோவிலிலே தேடாதே மனிதா இறைவன்
மனக்கூண்டுக்குள்ளே கிடக்கிறானே மனிதா!
கூண்டைக்கொஞ்சம் திறந்துவிடு மனிதா!
உறங்கும் உள்அவனை உசிப்பிவிடு மனிதா!
உறக்கமதில் சிறு கனவே வாழ்க்கை
காலம் விழித்துக்கொண்டால்
முடிந்து போகும் வேட்டை!
தேடித்தேடி அலைவதெதை தோழா!
வாழ்வில் நிலையானது எது சொல் தோழா!
தொடக்கமதில் முடியும்
முடிவதிலே தொடங்கும்
அந்தரத்து அரங்கம் இந்தபூமி-உன்
சொந்தமொரு அணுவுமில்லை சாமி!
மதம் மொழி இனம் தேசம் எனக்கூவி
வெறியாடும் கூட்டமெல்லாம் போலி,
செயற்கைச் சாவுகளும்,
வறுமை,
பசி, பிணி நேர்வுகளும்
சரித்திர சாசணம் ஆக்குவதா நீதி?
அன்பே நிரந்தரம் !
அன்பு ஒன்றே ஆனந்தம்!
அன்பு கொடுப்பதும்
கிடைப்பதும் பேரின்பம் !
3 Comments:
Inexpensive DIY Solar Power - The $600 Kit
Michael G. Richard, Ottawa We all know that outfitting a house with solar panels is not cheap right now.
Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!
I have a russian wife site. It pretty much covers
russian wife related stuff.
Come and check it out if you get time :-)
அன்பே சிவம். நல்லதொரு கவிதை.
"கோவிலிலே தேடாதே மனிதா இறைவன்
மனக்கூண்டுக்குள்ளே கிடக்கிறானே மனிதா!
கூண்டைக்கொஞ்சம் திறந்துவிடு மனிதா!
உறங்கும் உள்அவனை உசிப்பிவிடு மனிதா!
உறக்கமதில் சிறு கனவே வாழ்க்கை
காலம் விழித்துக்கொண்டால்
முடிந்து போகும் வேட்டை!"
அன்பே சிவம் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறது உமது கவிதை. வாழ்த்துக்கள்
Post a Comment
<< Home