11.திரும்பிப்பார்த்தபோது...
11. பழைய சோறும் வெங்காயமும்-1
இளைய வலைநண்பர்களை பார்க்கும்போது
சற்றுபொறாமையாகவே இருக்கிறது.அந்தக்காலத்தில்
இதுபோல் கணிணியோ வலைப்பக்கமோ இல்லாததால்
எனது 20 வயதுகளில் எழுதியதெல்லாம் நட்புவட்டத்துடன்
நின்று போனது.அந்தஏக்கத்தின்தாக்கமே இவைகள்.
சித்தனின் ஆட்டோகிரேப் சில உங்களுக்காக...[1975-1980]
உலகின் அனைத்துமத ஏடுகளையும்
ஒன்றாய்க்குவித்து நெருப்பிட்டால்
அதில் குளித்து இன்றே நான்
சாகத்தயார்..
2. குழந்தைகள்
உன் பெற்றேரை நீ படுத்தியபாடெல்லாம்
வட்டியுடன் உனைப்ப்டுத்தவருகின்ற
அசல் தொல்லை..
3 சிறு கீறல்
அமைதியான குலம்தனிலே
கல்விழுந்து சிறு சலனம்
அலை ஓய்ந்து போனாலும்
மனத்தடியில் கல் கிடக்கும்..
4 மாதவிக்கொடிப்பூ
மாதவி நினைத்திருந்தால்
மாநகரம் பெற்றிருப்பாள்
மாதவனைத்தான் நினைத்தாள்
மாமணிமாலை பெற்றெடுத்தாள்
தோன்றிவந்த குலமோ கணிகை
வேறூன்றி வளர்த்தாள்அன்பை தாரகை
கோவலன் என்பான் அவளது மாளிகை
கோமகள் அவளொரு காவிய தேவதை
அனலில் இட்ட கண்ணாடி மீது-ஒரு
அமுதத்துளி வீழ்ந்தாலும் ஏது
சந்தேகம் என்னும் வினைத்தூது
மென் தேகம் வாடியதே-உயிரோடு
தாலிகொள்ளா நன் மனையாள்
போலியில்லா நெஞ்சினியாள்
வேலிக்கல்லாய் இருந்தமன்னன்
வேசிமுள்ளாள் என்று சென்றான்
சித்திரைப்பொன்மதி விழாக்காலம்
சிற்றிடையாழி[ளி]ன் எழிற்கோலம்
நித்திரையின்றி விழி பாவம்
நிறைந்த அன்பிற்கா பாலம்?
அவிழ்தக்கனவுகள் அவன் தந்தான்
மகிழ்ந்தகாலங்கள் மறந்துபோனான்
கவிழ்ந்தபடகாய் அவள் நிலைதான்
அவிழ்ந்தகூந்தலில் புதைமதிதான்
இனியவள் நெஞ்சின் திருக்கதவு
இனி யவள் வாழ்வில் கருக்கனவு
தனிமை வாழ்வில் புது உறவு
புனிதப்புத்தன் பூ வரவு...
5.பேதை
முகம் பார்க்கும்கண்ணாடியான கோதை
அகம் எங்கும் பருவத்தின் உணர்ச்சிக்கோர்வை
தன்முன்னே வந்தமன்னன் மன்மதனென்று
கண்முன்னே ஆயிரமாம் கற்ப்பனை கொண்டு
காலத்தின் விளையாட்டுக்கவிதை எழுதி
கோலத்தை வரைந்திடுவாள் காவியமென்று
காவியமும் ஓவியமும் கண்ணீரெழுத்தாய்
ஆனபின்னே வாடிடுவாள் காகிதப்பூவாய்..
6.காதல் பசி
காதலர்க்கு பசியேது!
காதலுக்குத்தான் பசி
ஆதலினாலோ
பலசமையம்
காதலர்
உயிர்குடித்து காதல்வாழ்கிறது.?..
7.கடலை+காதல்> வைரஸ்
ஓய்ந்தமழையில்
சாய்ந்தபூவாய்
ஒவ்வொரு துளியாய்
மங்கைகரைந்தாள்!
மறந்தாயோ!
கல்லூரி மரத்தடியை!
காதல் மனச்செடியை!
இன்பக்கிளை நிழலில்
நாம் வறுத்தகடலையெல்லாம்
தேனாய்ச்சுவைத்ததன்றோ!
வறுத்தகடலையெல்லாம்
பழசாய்ப்போனதினால்
நானிறு கசந்தேனோ!
வாழ்வின் ஒத்திகையென்றாய்-இன்று
ஒத்திப்போட்டே வாழ்கின்றாய்!
உன் நினைவைக்கொஞ்சம்
உலவ விட்டுப்பார்
உல[ள]ரவில்லை இன்னும் என்
உதடுகள்!
காயம்செய்தாய் மாயம்செய்தாய்
கனவுகள்தந்து காலம்புதைத்தாய்!
நான்புதைந்து போனேன் –நீ
மறை[ற]ந்துபோனாய்!
தேர்வுடன் மறந்துபோகும்பாடமென
தேர் இவளைத் தெருவில்விட்டாய்!
"பட்டம்" வாங்கிவிட்டு
"நூல்" இன்றிப்பறப்பாயோ!
எத்தனை சினிமா போயிருப்போம்
முழுசாஏதும் பார்த்தோமா-உன்
மனத்திரையைக்கொஞ்சம்
விலக்கிப்பார்! சென்சார் காட்சிகளே
முழுநீளமாய் நீளும்!
பாட்டுப்போட்டியில் பாடலை
பாதியில் நிறுத்தியபோதும்
பரிசுதந்தாயே! இன்றும் நான்
பாதியிலே!
கல்லூரிப்பேருந்து கேள்வியற்று
கிடந்தபோது
நாம் மட்டும் பலமுறை
பயணித்தோம்!
இது உனது வாகனம்
பிறர் பயணிக்க விரும்புவையோ?
என் கண்களின் ஆழத்தில்
அடிக்கடி நீ மூழ்கிப்போவாய்
உயிர்கொடுத்துக்காத்தவளின்
மூச்சைப்பறிப்பாயோ!
மேத்தாவின் ”கண்ணீர்ப்பூக்களை”
பரிசளித்தவனே!இன்று நானே
“கண்ணீர்ப்பூ” எனை யாருக்கு
பரிசாக்கப்போகிறாய்!
அள்ளி என்றாய் தாமரையென்றாய்
நிலவென்றாய் கதிரென்றய்
இப்போதுபுரிகிறது நீ
இரவும்பகலும் ஒனறாய்
வேண்டுபவன் என்று!
“சித்திரை நிலவே மார்கழிக்குளிரே”
அன்று உரைத்தது இன்றுபுரிந்தது-நீ
கோடையும் குளிரும் ஒன்றாய்
கேட்ப்பவனென்று!
இறுதியாய் ஓர் வேண்டுகோள்!
உனது காதலித்தகடிதமெல்லாம்
கட்டிவைத்துக்காத்திருப்பேன்
சுட்டியென சொன்னவனே
எட்டியென நினைக்காதே!
எட்டி நின்று வாட்டாதே
கேட்டிமேளச்சத்தமிட்டு
கட்டிக்கொள்ள வந்துவிடு!
ஓய்ந்தமழையில்
சாய்ந்தபூவாய்
ஒவ்வொரு துளியாய்
மங்கைகரைந்தாள்!
நீங்க விரும்புனா
மீண்டும் வருவேன்!
சின்னவயசு சித்தன்
3 Comments:
கலக்கல்
படமும், கவிதைகளும் !
:-)
இன்னும் சின்ன வயது சின்னவன்
கவிதை நன்றாக இருக்கிறது, இடையிடையே உள்ள எழுத்துப் பிழைகள் நீங்கலாக.
பதினாறு வயதுப் பையனா அந்த போட்டோவில்?
அமைதியான குளம் தனிலே
கல்விழுந்து சிறு சலனம்
அலை ஓய்ந்து போனாலும்
மனத்தடியில் கல் கிடக்கும்..
7.கடலை+காதல்> வைரஸ்
நல்ல கவிதை. தொடர்ந்து தாருங்கள் நன்றாக உள்ளது.
Post a Comment
<< Home