Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Sunday, October 09, 2005

12 .கண் முன்னே கடவுள்


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? வெறுமனே படம் காட்டாமல்
எனது நண்பருக்காக அன்று எழுதிய பாடலை இந்த படத்துடன்
பதித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் “மறுபதிப்பு” செய்கிறேன்.


இந்தப்பாடலைப்படிக்கும் முன்”வருஷமெல்லாம் வசந்தம்”
“எங்கே அந்தவெண்நிலா” பாடலை ஓடவிட்டு படித்தீர்களானால்
சுவையாக இருக்கும்.




தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !
தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !
முள்ளால் மலர்சூட்டியும்
வாடாமல ராகினாய்
தேவாதி தேவனே !
தேவா தி தேவனே ! தேவாதி தேவனே !


துன்பநிழலையும் இன்பமாய்க்காணுவாய்
தூய மனக்கடல்.. மாயக்கண்ணனே !
துயரக்குரல்களின் சோகம் மாற்றிடும்
தூய தூதனே! எங்கள் தேவனே !

ஆடுகள்மேய்ப்பது உன் தொழிலா!
மக்கள் மனங்களை துவைப்பது
உன் எழிலா!
துடுப்புகளில்லா பாய்மரமாய்
திசையின்றி ஓடும் வாழ்வினிலே

நானோர் பாவன் உந்தன் நேயன்
நல்வழி என்னைமாற்றுமைய்யா !என்றும்
நல்வழி என்னை மாற்றுமைய்யா !

தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !


அற்புத அண்டத்தில் ஆடும் பந்தென
கடுகெனபூமிதான் ஆனால் ஆட்டம் கோடிதான்

அமைதியை விரும்பிடும் அன்பர்கள் உலகமாய்
இதயத்தைமாற்றிடு எம்மை நல்லவராக்கிடு!

சிலுவைகள் சுமந்தாய் எமக்காக!
எந்தவலியையும் பழக்கனும் அதற்க்காக
மீண்டும் மறித்தாய் எதற்க்காக-அது
இயற்க்கையின் நியதி அதற்க்காக!

ஒற்றுமை வேண்டி உலகெலாம் சுற்ற
வல்லமை கொடு நல்லவனே!நல்
வல்லமை கொடு நல்லவனே!

தேவாதி தேவனே ! தேவாதி தேவனே !
தேவாதிதேவனே ! தேவாதிதேவனே !
முள்ளால் மலர்சூட்டியும்
வாடாமல ராகினாய்
தேவாதி தேவனே !

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 09 October, 2005, Blogger தாணு said...

தருமியோட பதிவு ரொம்ப படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். அடுத்து `ஏன் மதம் மாறப்போறேன்'னு பதிவு போட்டுடாதீங்க.

 

Post a Comment

<< Home