GEMS வாங்களாம் வாங்க!
நவமணிகள் [GEMS]
பெரும்பாலான மணிகள்[முத்து,பவழம் தவிர்த்து] எரிமலைக்குழம்பிலிருந்து உருவானவை.இவை கனிம தாதுக்கள் ஆகும்.ஒளிவீசும் காரணத்தால் இது மணி எனலாயிற்று. மணி என்றால் ஒளி, அழகு எனப்படும்.
இந்தமணிகளின் வயது 100கோடி ஆண்டுகள்முதல் 500 கோடி ஆண்டுகள் வரை எனக் கணக்கீடு கூறுகிறது.பண்டைய மணிதன்
18 மணிகள் மட்டுமே அறிந்திருந்தான்.கணிமங்கள் 2000 வரை உள்ளன.இவற்றில் மணிகள் 85 மட்டுமே.இவற்றில் 16 மணிகள்
மட்டுமே நகைக்கு பயன்படுகின்றன.எந்த மணியும் 100% சுத்தமாக இருந்தால் நிறம் கிடையாது.மணிக்குள் தூசு போல் இருக்கும் தனிமம்தான் நிறத்தைத்தருகிறது. மணிக்குள் ஊடுருவும் ஒளி சிதறுவதால் ‘பளிச்’ என கண்சிமிட்டுகிறது.
மணிகளுக்குள் அமையும் தனிமத்திற்கேற்ப மணிகளின் நிறம் அமைகிறது. குரோமியம்-சிவப்பையும்,அலுமனியம்-பச்சை நிறத்தையும்,டைட்டோனியம்-நீலத்தையும்,இரும்பு-மஞ்சள் நிறத்தையும் தரும்.கடுமையான பொருட்க்களில் ஒளி ஊடுருவிச்செல்லும் போது அதன் வேகம் நொடிக்கு 1லட்சத்து 23 ஆயிரம் கி.மீ.ஆகும். மணியில்படும் ஒளியானது ஊடுருவி வெளியேற முடியாமல் எதிரொளித்து ஒளி வெள்ளமாக மின்னுகிறது. ஒளி ஊடுருவும் வேகம் குறையக்குறைய மணியின் தரம் உயர்கிறது.
இம்மணிகள் அந்நாளில் ஆற்றுப்படுகைகளிலும்,கடற்கரை மணலிலும் கிடைத்தன.மண்னுக்கு மேலே கிடைப்பது மணிகள்
மண்னுக்குள் தோண்டியெடுப்பது கனிமங்கள்.மணிகள் தனிமங்கள் பல இருந்தும் நவமணிகள் என ஏன் 9-ஐ மட்டும் நம் முன்னேர்கள் சிறப்பித்தார்கள் என்பது புரியவில்லை.
1.முத்து [PEARL]
உருண்டையாக முற்றுப்பெற்ற வடிவத்தினால் முத்து என்றாயிற்று. பெர்ல்-இந்த ஆங்கிலப்பெயர் பால் எனும் தமிழ் சொல்லிலிருந்து பிறந்தாகும். பாண்டியன் மனைவியின் காற்ச்சிலம்பு முத்துக்கள் உடையது[“யாமுடையச் சிலம்பு முத்துடை அரியே”சிலப்பதிகாரம்] அரி- பால் .
முத்துக்களில் ஆணிமுத்து,கட்டாணிமுத்து சிறந்தது.முத்தில் பழுப்பு, பச்சை,நீலம்,இளஞ்சிவப்பு,கறுப்பு நிறத்திலும் உள்ளன.
மழைத்துளி அல்லது பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து முத்தாகும் என்பது மக்கள் நம்பிக்கை ஆனால் கடலில் வெதுவெதுப்பான நீரோட்டமுள்ள இடத்தில் வாழும் சிப்பியின்உள்ளே சென்றுவிடும் மணல் புழுபோன்ற சிப்பியை உறுத்தல் செய்ய ஒருவித நீர்மம் [epithelium] சுரக்கிறது.பளபளப்பான சுண்ணாபுச்சத்துள்ள நீர்மம் மணலைச்சூழ்ந்து கெட்டியாகிறது.
இதுவே முத்தான “முத்தா”கிறது.
முத்தின் ஆயுள் 100 ஆண்டு முதல் 300ஆண்டுகள். இதன் வேதியல் பெயர் கால்சியம் கார்பனேட் …
2. பவழம் [CORAL ]
முத்துபோன்று கடலில் விளையும் ஒரு மணி பவழம். இதன் நிறம் பொதுவாக சிவப்பு என்றாலும் வெள்ளை,நீலம்,கறுப்பு நிறங்களிலும் உள்ளது.முத்தைப்போலவே வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில் பவழம் விளையும்.பவழப்பூச்சி[பாலிப்]எனும் கடல்வாழ் உயிரினம் கரையான்போல் கட்டும் புற்றே பவழப்பாறையாகிறது. இது பாறைபோல் இருக்காது,பல கொடிகள் கிளைகளையுடைய மரம்போல் இருக்கும். இதன் வேதியல் பெயரும்-கால்சியம் கார்பனேட் தான்.
3. வைரம் [Diamond]
ஆப்ரிக்கா,தென் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் தோண்டி எடுக்கப்படுகிறது.மண்னுக்கடியில் 1 கி.மீ ஆழத்தில் வைரம் கிடைக்கும்.சுத்தமான வைரம் நீரில் மிதக்கும்.நிறமற்ற வைரமே உயர்ந்த தரம்.இது பச்சை,சிவப்பு,மஞ்சள்,நீலம்,சாம்பல் நிறங்களிலும் கிடைக்கிறது.விலையுயர்ந்த வைரம் ஒரு சாதாரண கறித்துண்டுதான்,ஒரு துண்டு கரி,ஒரு துண்டு வைரம் இரண்டையும் எரித்தால் மிஞ்சுகின்ற சாம்பல் ஒரே தன்மையுடையது தான்.
இதன் வேதியல் பெயர்-கார்பன் இரும்பு ஆக்சைடு.
4. வைடூரியம் [Lapis Lazuli]
இது பூனைக்கண் எனவும் கூறுவர்.”தீதறு கதிர்”என சிலப்பதிகாரம் இதைக்கூறுகிறது.பொதுவாக இது பொன்னிறம் உடையது.
5. நீலம் [Saphire]
நீலநிறத்தின் காரணமாக இப்பெயர் பெற்றது.சங்ககாலத்தில் மணி என்றாலே நீலத்தைத்தான் குறித்தது.”நின்னது திகழொளி சிறப்பிருள் திருமணி”[பரி பாடல்]நீலமணிகள் வான்நீலம்,கடல்நீலம் எனவகைப்படுத்தப்படும்.இதில் வான்நீலமே சிறந்தது.நீலமணி ஆரஞ்சு,மஞ்சள்,பச்சைநிறங்களிலும் கிடைக்கிறது.அவற்றை சிவப்புநீலம்,கொம்புநீலம் என்பர்.
பால் பாத்திறத்தில் நீலக்கல்லைப்போட்டால் பால் நீலநிறமாக தெரியும்.இதுவெ உயர்ந்தநீலமாகும். இலங்கை நீலம்தான் உலகப்புகழ் பெற்றது.அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள லிங்கன்,கென்னடி சிலைகளின் முகம் மட்டும் நீலமணிகள்.
அலுமனியம் ஹைட்ராக்சைடு இதன் வேதியல் பெயர்.
6. மரகதம் [Emerald]
Emerald என்பது பாரசீகச்சொல் இத்ற்கு பச்சை என்பது பொருள்.பண்டைக்காந்தொட்டே மனிதன் அதிகம் விரும்பும் மணியாகும்.வைரத்தின் அளவுக்கு மதிப்புள்ளது.இதில் உள்ள குரோமியம் இதற்கு பச்சைநிறத்தைத்தருகிறது.
கொலம்பியா,வட கலிபோர்னியா பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.
போராஸ் அலுமியம் ஆக்சைடு இதன் வேதியல்பெயராகும்.
7. மாணிக்கம் [Ruby]
அழகு,ஒளி,மினுமினுப்பு எல்லாவற்றிலும் வைரத்தை விட மாணிக்கம் சிறந்தது. வட மொழியில் இரத்தினம்,மற்றும் பதுமராகம்[தாமரைச்சிவப்பு] என்பர்.சிவப்பு நிறத்தைக்குறிக்கும்’ரூபஸ்’என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து ரூபி எனும் ஆங்கிலச்சொல் பிறந்தது.
“மழபாடியுள் மாணிக்கமே”என தேவாரம் பாடுகிறது.
“என் காற்சிலம்பு மணியுடை அரியே !”என்கிறது சிலப்பதிகாரம்.
இதன் வேதியல் பெயர்-அலுமனியம் ஆக்சைடு.
8. கோமேதகம் [Sardonyx or Hassinet]
நவ மணிகளில் விலை குறைந்தது கோமேதமே!
பசுவின் சிறுநீர் போன்ற நிறத்துடன் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
இதன் வேதியல் பெயர்-புளூரின் ஹைட்ராக்சைடு.
9. புஷ்பராகம் [Topaz]
‘ டோபாஸ்’ என்றால் மஞ்சள்கல் எனப்படும்.இது குறைந்தவிலையில் கிடைப்பதால் ஏழைகளின் வைரம் எனப்படும். இதன் வேதியல் பெயரும் புளூரின் ஹைட்ராக்சைடு தான்.
இந்த மணிகளால் யாருக்கு என்னபயனோ நகைக்கடை அதிபர்களுக்கே அதிக லாபம். ராசிக்கேற்ற கல் இது அது என மக்களைக்குழப்பி குளிர்காவேர் உலகெங்கும் பார்க்கிறோம். அறிவியல் அடிப்படையில் இந்தக்கற்களுக்கும் கிரகங்களுக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை.
சித்தமருத்துவத்தில் முத்து பவழம் பஸ்பமாக்கப்பட்டு ஒவ்வாமை,நுரையீரல் மற்றும் எலும்பு சம்மந்தமான நோய்களுக்கு வழங்கப்படுகிறது.
4 Comments:
Very good info. Thanks
//ராசிக்கேற்ற கல் இது அது என மக்களைக்குழப்பி குளிர்காவேர் உலகெங்கும் பார்க்கிறோம். அறிவியல் அடிப்படையில் இந்தக்கற்களுக்கும் கிரகங்களுக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை.//
செக் பன்னாம போட்டா மண்டைய போட்ருவீங்கன்னு சொல்லி வேற மிறட்டுவானுங்க.
செவ்வாய்கிழமை காலை ராஜ் டிவி பார்த்துட்டு, பிரச்சினை தீர பணத்தை ஒரு இடத்துல கொட்டுறாங்களே அந்த மக்களை என்ன பண்ணலாம்ன்னும் சொல்லி இருந்தா செளகரியமா இருந்து இருக்கும்.
சித்தன்,
நல்ல விளக்கம்தான். யார் யாருக்கு, இல்லேன்னா எது எதுக்கு எந்த மணின்னு தெரியாததாலேதான்
பேசாம நவரத்தின மோதிரமோ ,கம்மலோ, பெண்டண்ட்டோ போட்டுக்கறது.
எல்லா கலர்சேலைக்கும் பொருத்தமா இருக்கும் பாருங்க:-)
இங்கேயும் இந்த நவரத்தினம் தவிர இன்னும் பலவிதமான கற்களும், அதுக்குண்டான குணமும்
சொல்லி விக்கற கடைங்க இருக்கு!
Post a Comment
<< Home