நாளை நமக்கெல்லாம் தலைதீபாவளி
தீபா வளி [ழி] ப்போக்கன்
எனக்கு இது தலை தீபாவளி
இந்த “வலைக்காதலி”யின் கரம்பற்றியபிறகு
வரும் தீபாவளி என்பதால்
இது தலைதீபாவளி!!!
நம்மில் பாதிக்குமேல் இந்தவருடம் தலைதீபாவளியாத்தான் இருக்கும்
எனவே எங்களுடன் சேர்ந்து ரிட்டயர்டு ஆன பெருசுகளும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வாங்க வாங்க !!!
அண்டவெளி மீன் சுட்டிகள்போல்
வலைவழி ஆடும் உயிர்த்தொட்டில்கள்!
உன் வண்ணம் மாறிப்போனாலும்
எண்ணம் நிலைத்திருக்க மின்னும்
மெய்த்தடங்கள்!
முன்னூட்டம் பின்னூட்டமென
கண்ணோட்டம் காட்டும் காலமலர்கள்!
உன் எண்ணத்தோட்டத்தில்
வந்து விளை[னை]யாடும் பட்டுத்தென்றல்!
நிற்க்காத பூமியில் காற்றில்நீந்தும்
அந்தரத்து வலைக்குஞ்சுகள்!
சமத்துவச்சாரல் வீசும்
ஏகாந்த உலகம்!
கத்தியின்றி இரத்தமின்றி போர் நடக்கும்
சத்தமின்றி!
உனக்குள் உலகமா
உலகுக்குள் நீ உலாவா வென
ஊஞ்சலாட்டும் ஊர்க்குருவி!
மின் இழைவேலிக்குள்
கை வலிக்க ப்பாத்திகட்டி
விதைத்தல்,நடுதல்,ஒட்டுதல்,ஓட்டுதல்
வெட்டுதல்,கட்டுதல்,பதியம் என
பலவித்தைகள் செய்து
எல்லாப்பயிகளும்[எல்லாப்பிரியர்களும்]
விழையும் அந்தரத்தோட்டம்
பலபல கண் நீர் ஊற்றித் தழைக்கும்
கற்பகவிருட்சம்!
கண்பட்டால் சோகமென்பர் உலகர்
பிறர் கண்படவே வேள்வி செய்வர்
“பிளாக்கர்”!
உலகம் சுற்றும் வரை
ஊர்சுற்றும் உன் சொந்தம்[உண்மை ச்சொத்து]!
பாசப் பைங்கரங்கள் நேசப்பூக் கோர்த்து
வாழ்க வாழ்க
"தமிழ்மணம்" வாழ்கவென
மாலை சூ[ட்]டிக் கொள்வோம்!
என் கதைநாயகியே
நான் போன பின்னும் நீ
நின்று வாழ்கா!!!
6 Comments:
சித்தன்....எனக்கும் இந்த தீபாவளி தான் தலை தீபாவளி. :-)
வருக குமரனே வருக!
தினமும் தீபஒளி தருக!
happy diwali sorry thalai diwali chiththan.we also got an oppertunity to celebrate ungalodu kondadiyathil .
thalai deepawaliyis sweets ok karam ok
very interesting.
niraya karam sappittivittu ajeernan.any medicine!
ஆமா
அப்ப காற்றுவெளிக்கும் இது தலைதீபாவளிதான்.
ஆனா இந்த வருடம் தீபாவளி கொண்டாடக்கூடாது
ஆனால் சித்தன்
இந்த அன்பும் ஆர்வமும் உண்மை
நன்றி தாணு&மது
Post a Comment
<< Home