மூலிகைச்செல்வங்கள் 2
மணத்தக்காளி[மிளகு தக்காளி]
Solanum nigrum
நாம் உணவில் அடிக்கடிசேர்த்துக்கொள்ள வேண்டிய கீரைவகைகளில்
இதுவும் ஒன்று. உடலைத்தேற்றுவதுடன் வாய்ப்புண் குணமாகும்.[B1,B2 விட்டமின்கள் நிறைந்தது].
வயிறு சம்மந்தமான நோய்களுக்கு சிறந்தது.கோழை அகற்றும் மலமிலக்கும் தன்மை உடையது.
சிறுநீர், வியர்வையைப்பெறுக்கும்.தோல் நோய்க்கு சிறந்தது.
தூக்கம் உண்டாக்கும்.
இதயத்தை பலமாக்கும், நாட்ப்பட்ட கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தைகுறைக்கும்[தண்ணி அடிப்பார் கவனிக்க]
உடலில் ஏற்ப்படும் வீக்கத்தைக் குறையும்[அது எத்த நோயால் ஏற்ப்பட்டிருப்பினும்]
வியாதியிலிருந்து குணமடைந்தோர் உடல் தேற்றியாக
இந்தக்கீரையை பயன்படுத்திவரலாம்.
சுவையின்மையை போக்கி வாந்தி உணர்வைக்குறைக்கும்தன்மை மணத்தக்காளி வற்றலுக்கு உண்டு எனவே கற்பிணிப்பெண்கள்
குறைந்த அளவு மணத்தக்காளி வற்றல் பயன்படுத்தலாம்.
7 Comments:
நாங்கள் சிறு பிராயத்தில் சோறாக்கி குழம்பு காச்சி விளையாடும்போது மணத்தக்காளி கீரைதான் குழம்புக்குப் பயன்படுத்துவோம். அந்தச் செடியில் உள்ள பழங்களைப் பறித்து நிஜமாகவே உண்போம். நல்ல சுவையுடன் இருக்கும் அது.
நன்றி சித்தன்.
அன்புடன்,
மூர்த்தி.
http://www.muthamilmantram.com
மிகவும் உபயோகமான தகவல்களை தருகிறீர்கள், நன்றி.
என் கணவருக்கு ஒரு வருடமாக ரத்த அழுத்தம் இருக்கிறது (high BP). இதற்கு ஏதாவது தீர்விருக்கிறதா?
மிக்க நன்றி.
Nicely written
நல்ல பயனுள்ள தொடர்.
நன்றி சித்தன்.
----
என்ன! இந்தக்கீரை வகைகளே கிடைக்காம, ஊர்லன்னா இப்போ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கீரை இருக்குமேன்னு நினைவு வர்ரப்ப[யாரு நினைப்புக் கொண்டு வர்ரதுன்னு கேளுங்களேன். ஊர்ல இருக்கிறவங்கதான்! :)] நினைச்சு நினைச்சுட்டு இருக்கிற எனக்கு, இந்தப் பதிவைப்பார்த்தா எப்படி இருக்கும்னு சொல்லுங்க. :)
சரிசரி உண்மையைச் சொல்லிர்ரேன்.
நிலமை ரொம்ப மோசம்னு இல்லைத்தான்.
இலங்கைல பயன்படுத்தும் வல்லாரை, பொன்னாங்காணி கீரைகள் ஒவ்வொரு வாரம் விமானத்தில் வந்திறங்கும். கொஞ்சம் விலைதான் என்றாலும் வாங்கலாம். அப்பப்போ அகத்திக் கீரை கிடைக்கும்.
கோடை காலத்தில், நாமளே கீரைக்கொட்டைகள் இருந்தா பயிர் செய்யலாம்.
என்ன இந்தியாவில் கிடைக்கிற கீரை வகைகள் கிடைக்காது. தூதுவளைல தொடங்கி அரைக்கீரை வரைக்கும் நினைச்சுப் பார்த்துக்க வேண்டியதுதான். சரி என் பொலம்பல் என்னோட. :(
-மதி
வலைப்பூவில் ஒரு கன்சல்டேஷன் ரூம் போட்டாச்சு போலிருக்கு. பீஸில் பாதி எனக்கு தந்திடணும், எக்ஸ்பர்ட் ஒபீனியன் அப்பப்போ தருவதற்கு!
உங்க மூலிகைக் கஷாயம் பற்றி அடுத்து எழுதுங்களேன். பயனுள்ளதாக இருக்கும்.
மதி இந்த ஆசாமிகிட்டே கவனமாக இருங்க, ஏதாச்சும் பச்சிலை வைத்தியம் பண்ணி வசியம் வைச்சிடப்போறார்.
நன்றிகள் பல அனைவர்க்கும்.
அய்யையோ கீரை சாப்பிடும்போதெல்லாம் இனி மதி
அவர்களின் ஞாபகம் வருமே..
கவலைப்படாங்க தாணு வசியம் மருந்து
Fபார்மூலா ரெடியானதும் அனுப்புகிறேன்.
ரம்யா அவர்களுக்கு> தனியாக ஒரு
பதிவு விரைவில்
நான் கிராமத்திற்கு சென்றால் விரும்பி கேட்பதில் மணத்தக்காளி கீரைக்கூட்டும், அகத்திக்கீரை கூட்டும் தான்.
தொடருங்கள், அருமையாக இருக்கிறது.
Post a Comment
<< Home