மூலிகைச்செல்வங்கள்-3 மஞ்சள்
மஞ்சள் [Curcuma longo ]
மஞ்சள் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ஈரோடுதானே!
இல்லை எங்களுக்கு “மஞ்சக்காட்டு மைனா எனைகொஞ்சி கொஞ்சிப்போனா” என்ற நினைவென்றால் நான் பொறுப்பல்ல.
“மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும் வஞ்சிப்பூங்கொடி”
“மஞ்சளும் குங்குமம் கொண்டதாமரைப்பூ பேரின்பஓடையில் தள்ளாடுது”
“மஞ்சள் முகமேவருக மங்கள விளக்கேவருக”
“மஞ்சள் அரைக்கும்போதுமதிலேரிப்பாத்த மச்சான்
பக்கத்தில் வந்தாலென்ன சொந்தம் காண”என்று சிலருக்கு
பாடத் தோன்றலாம்.மஞ்சளைப்பற்றிப்பாடாத கவிஞர்கள்
இருக்கமாட்டார்கள்.
மஞ்சள் எனில் மங்களம். மஞ்சள் இல்லாத பண்டிகை எதையும் தமிழரிடத்தில் நினைத்துப்பார்க்க இயலாது.
தென்னிந்தியாவை பிறப்பிடமாகக்கொண்ட
மஞ்சளானது ஈரோடு கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில்
அதிகம் விழைகிறது,ஈரோட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
பருத்தி,கரும்பு போன்று
மஞ்சள் பெரிய அளவில் வியாபாரப்பொருளாகும்.ஈரோட்டில் இதற்கென மஞ்சள்மண்டிகள் நிறைய உள்ளன.சமீபத்தில்கூட ஈரோட்டில் “மஞ்சள் வளாகம்”ஒன்று துவங்க முதல்வர் அவர்கள் அடிக்கல்நாட்டியுள்ளார்.
மஞ்சள் பூமிக்கடியில் விழையும் கிழங்குவகையைச்சார்ந்தது.வெட்டி எடுக்கப்படும் கிழங்கை மாட்டுசாணிப்பாலில் ஊரவைத்து வேகவைத்து
பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.இதுவே கறிமஞ்சள் ஆகும்.
கஸ்தூரி மஞ்சள் என்று காடுகளில் தானாகவிழையும் &பயிரிடப்படும் இனமும் உண்டு.[Curcuma aromatica] இதன் குணத்தினால் அழகு,நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள்,வாசனைப்பொருட்கள்,சோப்புகள்,தைலங்கள் தயார்செய்யப்படுகின்றன.மற்றபடி மஞ்சள் போன்றே இதன் குணங்களும் அமைந்துள்ளன.
எனவே இன்று நம்ம ஊர்மஞ்சளைப்பற்றிக்கொஞ்சம்...
மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் கல்லீரலை பலப்படுத்தும்,குடல் புண்களை குணமாக்கும்,பசியை கொடுக்கும்,
சுவையின்மை போக்கும்,
வீக்கம் கட்டிகளை கரைக்கும்,குடற்ப்புழுக்களை அழிக்கும்,தோல் நோய்கள் குணப்படுத்தும்.[Urticaria,Chronic skin eruptions ]
மஞ்சள் மதுமேகம்,காமாலை,குடற்புண் போன்றநோய்களுக்கு
தரப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
வெளிப்புறமாக பயன்படுத்தும்போது கற்றாழைவாசம் வீசும்
வியர்வை நாற்றத்தையும்,தோல் நோய்களையும் குணமாக்கும்.[மஞ்சள் சேர்த்து செய்யப்படும் குளியல் கலவைத்தூள் செய்முறை பின்னர் தருகிறேன்.]முகப்பருக்களை நீக்க உதவும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம்.
சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை
எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது.
மேலும் மஞ்சளுக்கு புற்றுநோயை குணமாக்கும் தனமைபற்றி
பத்மா[தேன் துளி] அவர்களின் கட்டுரைப்பதிவினை மக்கள் ஏற்கனவே அறிவீர்கள்.இலங்கை மக்கள் அதிக அளவில் உணவில் மஞ்சளைசேர்த்துக்கொள்வதால் புற்றுநோயின் சதவிகிதம் அங்கு குறைவாக உள்ளதென ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன.[curcuma]
கால் ஆணிக்கு = கொஞ்சம்மஞ்சள்+வசம்பு கொஞ்சம்+மருதானி
இலை +கற்பூரம் சிறிது>இவைகளை அரைத்து காலாணிக்கு கட்டி
வர குணமாகும்.
பாலில் மஞ்சள்+மிளகு+பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல்
குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.
முகப்பருக்களையும்,அழகைக்குறைக்ககூடிய இடங்களில் ஏற்ப்படும் ரோமங்களையும் நீக்கும் தன்மை இதற்க்கு உள்ளதால்
மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.
1868 ஆம் ஆண்டு முதற்க்கொண்டே மஞ்சள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஆண்மக்களே மறக்கம மஞ்சளை சமையல்ல சேத்துக்கங்க!
எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில்
பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர்
வழக்கம்.
இதற்கு விஞ்ஞான காரணமென எடுத்துக்கொண்டால்
மஞ்சள், மாட்டுசாணம், அருகம்புல் எல்லாமே சிறந்த கிருமிநாசினியாகும்.தத்துவமாக பார்த்தால் அருகு போல் வேறூன்றிஆல்போல் தழைத்து வாழ்கவென வாழ்த்துப்பா வில் கூறுவர்[அருகு எளிதில் எல்லா இடத்தில் ஆழமான வேர்களுடன் படரக்கூடியது ஆல மரம் பரந்துவிரிந்து விழுதுகளால் விருந்தோம்பி நீண்டநாள் நிலைக்கக்கூடியது.
இதே போல் மஞ்சளும் மங்களகரமாண எல்லாக்காரியங்களிலும்
பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தப்படுகிறது.அதன்
நிறம் மணம் சுவை குணம் பற்றி நம் முன்னோர்கள்
தெளிவாக அறிந்திருந்தனர்.
9 Comments:
சித்தன்,
உங்களுடைய மூலிகைச்செல்வங்கள் என்ற பதிவு மிகவும் அருமையாக உள்ளது, பயனுள்ள பதிவுகள். தொடர்ந்து எழுதுங்கள்.
சித்தரே!,வணக்கம்.பின்னூட்டங்களை பெரிதாக எழுதாவிட்டாலும்-நான்படிக்கும் பதிவுகளில் உங்க பதிவும் ஒன்று.இங்கே பதியும் உங்கள் செயல் அளப்பெரியது.இன்றைய நமது யுகத்தில் இந்த மூலிகை அறிவைப்பற்றி நமது தலைமுறைக்கு அவ்வளவு அறிவில்லை.உங்கள் பதிவுகள் மூலம் நான் பல ஆச்சரியமான தகவல்களைப் பெறுகிறேன்.
நன்றி பதிவுகளுக்கு.
அன்புடன் ஸ்ரீரங்கன்
திருநெல்வேலி பகுதிகளில் மஞ்சளை உணவில் அதிகமாக சேர்த்தால் ஆண்மைக்குறைவு வருமென்று ஒரு நம்பிக்கை இருக்கிறதே. உண்மையா இல்லை மூட நம்பிக்கையா? பெரியக்கா சீரியசாக என்னிடம் அறிவுரை சொன்னது.
நன்றி அனைவர்க்கும்.
மஞ்சளில் அடங்கியுள்ள
சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 349 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 13.1 கிராம்
புரதம் (Protein) 6.3 கிராம்
கொழுப்பு (Fat) 5.1 கிராம்
தாதுக்கள் (Minerals) 3.5 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2.6 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 69.4 கிராம்
கால்சியம் (Calcium) 150 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 282 மி.கி
இரும்பு (Iron) 67.8 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 278 மி.கி
செம்பு (Copper) 0.39 மி.கி
மாங்கனீசு (Manganese) 8.38 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 2.72 மி.கி
குரோமியம் (Chromium) 0.069 மி.கி
கரோட்டீன் (Carotene) 30 மை.கி
தையாமின் (Thiamine) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 2.3 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 18 மை.கி
Source: National Institute of Nutrition - Hyderabad
பதிவின்போது விடுபட்டமைக்கு மன்னிக்கவும்.
மஞ்சள் அதிகம் பயன்படுத்தினால் ஆண்மைகுறையுமென்பதில் உண்மையில்லை.ஏங்க புதியபதிவு ஒன்னும் காணலை?
மஞ்சளை தனியே தேய்த்துக்குளிக்காமல்
கீழ்க்கண்ட மூலிகைகளையும் சேர்த்துஅரைத்து வைத்து குளிக்கலாம்
கிச்சிலிக்கிழங்கு
சந்தனம்
கசகசா
கார்போகிஅரிசி
கோரைக்கிழங்கு
பூலாங்கிழங்கு
சடாமாஞ்சில்
வாய்விடங்கம்
இவைகளின் மருத்துவகுணங்கள் பற்றி
பின்னர் பதிகிறேன்.
பரஞ்சோதி சார் பின்னுட்டத்தில் புகைப்படம் எப்படிக்கொணர்வது?
பதிவிற்கே படம் போட்டேன் ஏனோ
வர மறுக்கிறது.
Here's something i wrote couple of years ago..
http://mathy.kandasamy.net/musings/2003/11/25/53
-Mathy
அன்பு சித்தன் அவர்களே!
உங்க ஜிமெயிலுக்கு தனிமடல் அனுப்பியிருக்கிறேன், பாருங்கள்.
- அன்புடன் பரஞ்சோதி
சித்தன்: நான் எழுதியது இங்கே: http://padmaarvind.blogspot.com/2005/03/blog-post_111206111233559497.html cox gene expression and cucurmin effect was one of the topic I researched at Cornell.
manchalai mihavum athihama thinanthorum undu vanthal enna vithamaana pakka vilaivuhal earrpadum? naan theriyaamal 50gkochchik kaai thulili 50 g manchal thulai cherthu kalavaiyai thodarchiyaaha pavithththal enakku mihavum viyarvai athihamaahi udal venthu ponathu pola vanthuvittadhu. pl chiththare ennai kaappatrungal
Post a Comment
<< Home