ஜாதியில்லா சமுதாயம்!


ஜாதியில்லா சமுதாயம் சாத்தியமா!
வெளி உலகம் எப்படியோ சுமார் ஆயிரம்பேர் [எண்ணிக்கை சரியாதெரியலை மன்னிசிடுங்க]கூடும் ‘தமிழ்மணத்திலாவது’ சண்டையில்லா வாசம் வீசுவோமே!
நிலத்தில் நீர்நிறப்பி வைக்கப்பட்டுள்ள எல்லா தண்ணீர் குடத்திலும் வானத்து சூரியன் தனித்தனியே தெரிந்தாலும் சூரியன் என்னவோ ஒன்றுதான், அதை மூடிவைப்பதனால் ‘அது’அதற்குள் அடங்குமோ!
அதில் என்குடத்துசூரியந்தான்பெரிசு,உயர்ந்தது,தெளிவானது,
ஒளிபொருந்தியது என்று பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கு என்ன நன்மை.
மூடிய குடத்துக்குள் இல்லாதகதிரவன் போல் வறட்டுகெளரவம், வீம்பாகி மூடிய உன் இதயத்துள்ளும் ஒன்றும் இருக்காது.
அணு முதல் அண்டமெங்கும் வியாபித்திருக்கும் ஆற்றலை உனக்கு பிடித்த, நம்பிக்கைகொண்ட பெயரில், உருவத்தில் போற்றுவது,பாடுவது,பேசுவது அடுத்தவனுக்கு இடையூறின்றி
யார் மனசும்நோகாமல் செய்தால் பிரச்சணையில்லை.
மதம் மொழி சாதி எல்லாமே கும்பல்கும்பலாய் வாழ்ந்தமனிதன்
அவன் வாழ்கைவசதிக்காக உருவாக்கிக்கொண்டது.
அந்தநாள் மதம் இன்றும் மாறாமலிருக்கிறதா! பண்டைய மொழிதான் இன்றுநாம் எழுதுகிறோமா!பேசத்தான் செய்கிறோமா! இல்லையல்லவா அதேபோல் சாதியென்ன எல்லாமே மாறிப்போகும்.
அது எப்படிமாறும்- இயற்கையாகவோ, செயற்கையாகவோ மாறும்.
நீ என்னநினைக்கிறாய் உன்மதம் உன்மொழி உன்இனம் எங்கும் பரவிநிழைக்க விரும்புகிறாய்,என் மக்களே சிறந்தோர் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் மற்றவர்கள் எல்லாம்பிறகுதான். இந்த மனிதனின் மாண்புமிகு மனப்பான்மைதான் ஆட்டத்தின் அஸ்திவாரமே! ‘ஆட்டம்முடிவில் அஸ்திக்ளின்சாரம்’
என் மதம் இல்லாமல்போய் விடும்,என் மொழி இல்லாமல் போய்விடும்- விடமாட்டேன் அதற்காக பிரச்சாரம் செய்வேன்,என்சொத்து முழுவது அதற்காக வாரிக்கொடுப்பேன்
என் ஜாதிக்காரன் மட்டும் நன்றாக இருக்க பாடுபடுவேன் என்றால் என்னசெய்ய முடியம். உனக்கு அதனால் கிடைக்கும் நிம்மதி,பேரும் புகழும் குறுகியவட்டமாய் போய்விடும், இதையே நீ பாரபச்சமின்றி எல்லோருக்கும் பயன்பட ஏதேனும்செய்தால் உண்மைஉலகம் உன்னை வாழ்த்தும்.
4 Comments:
ஜாதி மதம் என்று பிரிவினை இருக்கக் கூடாது என்று எண்ணத்துடன் எழுதப்பட்டுள்ள பதிவிற்காக வாழ்த்துக்கள் நண்பரே...
என் பதிவில் வந்த பின்னூட்டமும் இதுதானோ?
குமரன் ஜாதி மதம் இல்லாவிட்டால் உலகில் சண்டையேதோன்றக்காரணமில்லை
ஆமாம் மேடம் அப்படியாவது என்னைப்படிப்பீர்கள் என்றுதான் பதிவையே பின்னூட்டமாக்கினேன்
Post a Comment
<< Home