மூலிகைச்செல்வங்கள் 5 ,6 &7[சீரகம்,சோம்பு&கறிவேப்பு]
சீரகம் {CUMINUM CYMINUM}
ENG- Cumin seed OR caraway seed
FAM- UMBELLIFERAE
வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பொறும்பங்காற்றுகிறது.
கார்ப்பு இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.
இதன் மனம் சுவை செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில்
சேர்க்கப்படுகிறது.
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணைப்பொருக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை
அழிக்கவும் கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
நாட்பட்ட கழிச்சல் தீர மற்றமருந்துகளுடன் சேர்த்துகொடுக்க நல்லபலந்தரும்.
இரத்ததை சுத்தமாக்குகிறது,தொல் நோய்களை கட்டுப்படுத்துகிறது,
பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை,நெஞ்செறிச்சல் தீர
சீரகம்+கொத்தமல்லி+சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில்
கொதிக்கவைத்து வடித்து டீ போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகிவரலாம்.
வாய்ப்புண் உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக்குறைக்க எழுமிச்சம்பழச்சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்து கொடுக்கலாம்.
தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.
விக்களை நிறுத்தும்
“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ன விக்களும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே” என சித்தர் பாடல் ஒலிக்கிறது.
சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.
சோம்பு {PIMPINELLA ANISUM}
ஆங்கிலத்தில் ANISE or SWEET FENNEL or ANISEED என்று அழைக்கப்படுகிறது.
சோம்பும் சீரகமும் ஒரே தாவரக்குடும்பத்தை[Umbelliferae] சேர்ந்தாதாகும்.
அதைப்போலவே அவற்றின் செய்கைகளும் மருத்துவ குணங்களூம் பொதுவாக ஒரேமாதிரியே உள்ளன. சீரகத்தைப்போலவே சற்றே பெறிதாக இருக்கும் சோம்பு.
அசைவ ஹோட்டல்களில் சர்க்கரை கலந்துவறுத்த சோம்பு சுவைத்திருப்பீர்களே!
கவிதை தனியாகப்போட்டால் படிக்க ஆளில்லை எனவே இங்கே!
சந்தில் ஒரு சிந்து ! படிச்சுட்டுத்திட்டாதீங்க!!!
என் அவளே!!!
யாரோ யாருக்கோ எழுதியதை
ஒருமுறை படிப்பாய் கதைபோல
உனக்காய் ஒன்று நினைவாய் எழுதியதை
மறுமுறை படித்திடு கவிதைபோல.
கடலுக்குள் ஓடும் நதியாய்
என் இரத்தநாளங்களில்....
பூமிக்குள் பூக்கும் நெருப்பாய்
என் நெஞ்சக்குழிக்குள்....
வண்ணங்கள் அனைத்தும் அடங்கும் வெண்ணிறமாய்
உனக்குள் என் முகங்கள்.....
கறிவேப்பிலை{BERGERA KOENIGII}
ENG :CURRY LEEF TREE
லேசான கார,கைப்பு சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது.
பசி,உடல்வன்மை,சீரணத்தை சீராக்குதல்,நரை நீக்கும் இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த கறிவேப்பு கண்பார்வைக்கும் நல்லது.
தேவையான அளவு இதன் இலைகளை நெய்யில் வறுத்து பொடிசெய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கண்பார்வைக்கு நல்லது.
மலச்சிக்கள் தீர :–
கறிவேப்பிலை+இஞ்சி+மிளகு+சீரகம்+பெருங்காயம்
இவைகளை வெய்யிலில் காயவைத்து இடித்து வைத்துக்கொண்டு இரவில் சாதத்துடன் சாப்பிடலாம்.
குமட்டல்,வாந்தி,சீதபேதி[ Dysentery ]க்கு
நெய்யில் வதக்கிய கறிவேப்புடன் சிறிது உப்பு புளி காரம் சேர்த்து அரைத்து துவையல்செய்து உண்ணலாம்.
சளி,இருமல்,சீதக்கழிச்சல்,மதுமேகம்[ Diabetes ]குறைய:
இலைகளை சுத்தம்செய்து [2 கொத்து]2 டம்லர் நீர்விட்டு ஒரு டம்லராக காய்ச்சிவடித்து ¼ பங்காக 4 வேளை குடித்துவரலாம். முடிந்தால் இலைகளைப்பச்சையாகவும் உண்ணலாம்.
இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது குளிர்ச்சிதருவதாகவும் ,கண்களுக்கு நன்மைபயப்பதாகவும்
நரை நீக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது.
விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் இலைகளை பாலில் வேகவைத்து அரைத்துக்கட்ட வலி,தடிப்பு,எரிச்சல் குறையும்.
5 Comments:
அருமையான தகவல்கள். அனைவருக்கும் பயன்படும் தகவல்கள்.
சீரகத்தண்ணீர், இங்கே மலையாளி நண்பர்கள் வீட்டிலும் சரி, ஹோட்டலிலும் சரி, எனக்கு பிடித்த ஒன்று சீரகத்தண்ணீர், சுட சுட தண்ணீர் சீரகத்தை போட்டு வைத்திருப்பாங்க, அந்த தண்ணீரை குடிப்பதால் எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும்.
அடுத்தது கறிவேப்பிலை, என் மகள் வயிற்றில் இருக்கும் போது என் மனைவி நிறைய கறிவேப்பிலை சாப்பிட்டார், கறிவேப்பிலை துவையல் செய்து சாப்பிட்டார், என் மகள் பிறந்த போது தலையில் நிறைய முடி, ரொம்பவும் அடர்த்தியாக இருந்தது.
இதையே தம்பி பாஸிடிவ் ராமாவுக்கு சொன்னேன், அவரும் அவரத் குழந்தை பிறந்த போது தலையில் நிறைய முடி என்றார்.
மக்களே! நிறைய கறிவேப்பிலை சாப்பிடுங்க, தூர ஒதுக்காதீங்க.
பரஞ்சோதி அவர்களின் அறிவுரையை அமல்படுத்தி பார்க்கிறேன்.
வண்ணம் கொண்ட வெண்ணிலவு யாரோ?
சீரகநீர்=மிக்க நன்றி பரஞ்சோதி சார்,மேலும் கறிவேப்பிலையின் சில தகவல் விட்டுப்போச்சு இதோ=
சுண்ணாம்பு,மக்னீசியம்,இரும்புச்சத்து, தாமிரம்,குளோரின்,ஆக்சானிக் அமிலம் ஆகிய சத்துக்கள் கறிவேப்பிலையில் அடங்கியுள்ளன.குழந்தைகளுக்கு மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் வயிற்றுபொருமல்தீர சிறிது கறிவேப்பிலை+3 மிளகு சேர்த்து நெய்யில் வருத்து அரைத்து உள்ளுக்கு கொடுக்கலாம்..
தாணு மேடம் வெண்ணிலவை கேளுங்கள் பதில் சொல்லும்!
பயனுள்ள தகவல்கள் சித்தன் சார். இதுவரையில் இட்ட பதிவுகள் எல்லாத்தையும் ஓரே மூச்சில படிச்சிட்டேன்..
நன்றி
என்னை மேடம் ஆக்கிட்டா உங்க வயசு குறைவுன்னு காட்டிக்கலாம்னு ஆசையா தாத்தா?
Post a Comment
<< Home