மருந்தாகும் காய்கறிகள்-காரட்

காரட் [DAUCUS CAROTA ]
நமது உடலில் விட்டமின் A உற்பத்தியாகத்தேவையான “கரோட்டின்” என்னும் பொருள் மற்ற எல்லா காய்கறிகளைக் காட்டிலும் காரட்டில் அதிக அளவில் உள்ளது.
ஆப்கானிஸ்த்தான் இதன் தாயகம்.கி மு 13 நூற்றாண்டில் முதலாம் எலிசபெத் காலத்தில் இங்கிலாந்தில் அறிமுகமாகி அங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவியது.
சிறுவர் முதல் அனைத்து வயதினற்கும் ஏற்ற சத்து நிறைந்தது. ஆனாலும் இதை சமைக்காமல் பச்சையாக உண்டால் தான் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
இரத்ததைச் சுத்தமாக்கும்,பசியைத் தூண்டும், சிறுநீர் பெருக்கும், மலத்தை இளக்கும், இருமல் சளி குறைக்கும், இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கில் உள்ளதைவிட 6 மடங்கு கால்சியம் கொண்டது காரட். கால்சியம் இரத்த அழுத்ததை குறைக்கும் தன்மையுடையது, எனவே இரத்த அழுத்தம் உள்ள நண்பர்கள் ஜூஸாகப் பருகலாம்.
100கி திராட்சையில் உள்ளதைவிட 100கி காரட்டில் 25 மடங்கு பாஸ்பரஸ் அடங்கியுள்ளதால் மூளை சுறுசுறுப்பை தூண்டும்.
இன்சுலின் போன்ற “TOCKINCIN” என்னும் ஹார்மோன் காரட்டில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறந்தது.
காரட்டின் தோல்பகுதியில் சோடியம்,அயோடின் சத்துக்கள் அதிகம் காணப்படுவதால்,தோல் சீவாமல், வெறுமனே கழுவி மட்டும் பயன்படுத்தவேண்டும்.
இரத்தசோபை [DROPSY] நோயாளிகள் தினமும் இதை பருகிவர இரத்தம் அதிகரிப்பதுடன் கால் வீக்கமும் குறையும்.
சிறுநீரகம் மற்றும் அதன் பாதையில் ஏற்படும் படிமங்களை நீக்கவல்லது. [முள்ளங்கி,வாழைத்தண்டு,சிறுபீளை,நெருஞ்சில் இவைகள் போல்]
ஐரோப்பா நாடுகளில் காரட் சூப் காமாலை நோயாளிகளுக்கு
கொடுக்கப்படுகிறது.
காரட்டின் கீரையை உண்டுவர உடல் சிவப்பாகும் என்பது ஒரு நூலில் படித்தஞாபகம்.
நட்புள்ளங்கள் மன்னிக்க!
இது ஒரு கடைச்செருகல் கவிதை!
மழலையின் கனவுச் சிரிப்பென
மெல்லிய சுகமாய்த் தென்றல்
பனிமுத்துக்கள் தாங்கி
மெளனமாய்ச் சிரிக்கும் பூந்தளிர்
அதிசய ராகத்தில் ரகசியம் பாடும்
அழகிய மின்மினிப் பூச்சிகள்
வெட்டவெளியில் குப்புறப்படுத்து
கொஞ்சிக் கூப்பிடும் நிலவு
கலைந்து கிடக்கும் பச்சைநிறப்
பட்டுப் புடவையாய் புல்வெளி
இவைகளுடன் ... நான் மட்டும்.....
இயற்கையின் ரசிகனாய்!!!!
2 Comments:
புது வருடத்தின் முதல் பதிவா?
காரட்டும் சூப்பர், கவிதையும் சூப்பர்
எல்லாக்காய்கறிகள் பற்றியும் எழுதனும்
கொஞ்சம் பொறுங்க!தாணு
Post a Comment
<< Home