சுனாமி...காத்ரீனா...

சுனாமி.. காத்ரீனா.. ரீட்டா..
பெயர் மட்டும் மாற்றிவரும்
பொய்முகமே! பேயகமே!
பூபாளவேளையில் உன்
வீட்டு வாசலில்
உடற்க்கோளம் போடுகிறாய் ஏனோ!
எங்கள் உயிர் உனக்கென்ன தேனோ!
கடல்தாயே நீ பெற்றெடுத்தாயா?
தத்தெடுத்தாயா இப் பிசாசுக்குட்டிகளை?
உயிர்களின் பிறப்பிடமே..
உயிர்ப்பழி கொள்ளுவதோ!
ஏ கடல் தாயே !
காலம் மறந்து கவலைகள் துறந்து
காத்திருப்போம் உன்காலடியில்
கால்வருடிச்செல்லும் நீ எம்
கால்வாரி விடலாமா!
தினம்தினம் உன் மடியில்
உறங்கும் குழந்தைகளை
உன் நீர் நாக்கால் உப்புப்பால் வார்க்க
எப்படி முடிந்ததோ!
பவழம் முத்தில் குளிக்கும் மாதா!
எம்மவர் உடல்களால் மாலை
கோர்த்ததன் மர்மம் என்ன?
கன்னி, காதலி, காவியதேவதை என
கவிகள் பாடிய தேவியே!
கல்லறைக்காளியாய்
மாறிப்போனாயே!
பஞ்சபூதங்களே உமை
பூந்தென்றலாய்,கோயில் தீபமாய்,
பூக்காடாய்,உயிர் நீராய் பூஜித்த எமக்க
ஓங்காரப்புயலாய்,எரிமலைக்குழம்பாய்,
பூகம்பக்காடாய்,சுனாமிப்பேயாய்
தரித்தபோது
திக்கற்ற பிரபஞ்ச
ரகசியம்உணர்ந்தோம்..
இயற்கையே!
உன் நிலை உணராது போலியாய்ப் போனோம்.
உன் சத்தி மறந்து சகலமும் செய்தோம்.
எம்மவர் கர்வம் கரைத்திடவே
எல்லாம் நான் என நாட்டியம்
ஆடிநையோ!